பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182 தமிழர் நாட்டுப் பாடல்கள் கட்டப் பய குட்டப்பய கட்ட மண்ணு தாண்டிப்பய விசு வாசம் கெட்ட பய; விட்டானே ஒத்த வழி எலுமிச்சம் பழமிண்ணு எடுத்தேன் கைநிறைய கச்சக் குமிட்டுக் காயுண்ணு கண்டவுக சொல்லலையே காப்புக் கழண்ட தய்யா கைவளையல் கழண்ட தய்யா கோப்பு குலைஞ்ச தய்யா கோல மொழிப் பாவியால ஏசல் கயிறானேன் எருமை கட்டும் தும்பானேன் பாவி மகனால பரதேசிக் கோலமானேன் என்னைக் கெடுத்தவனை எனக்கு மதி சொன்னவனை சொகுசைக் குலைத்தவனை சுத்தாதோ என் பாவம்? பாம்பு கடியாதோ? பாவம் உனைப் பிடியாதோ? சாபம் பிடியாதோ? சர்ப்பம் உன்னைத் தீண்டாதோ? தண்ணியிலே தலைகவுந்து தருமர் கூட வழி நடந்து தம்புன சாமியாலே நனையுறனே துத்தலில என்னைக் கெடுத்தமிண்ணு எக்காளம் பேசாதே உன்னைக் கெடுத்துருவா உறுதியுள்ள பெத்தனாச்சி வேப்ப மரத்தை நம்பி வெள்ளரளிப் பூ வெடுத்தேன்