பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் 483 கொழுந்து அரைக்கீரை அறுக்கறுக்கப் பூ வாசம் விசுவாச கெட்ட வண்ட என்ன சகவாசம்? கத்தரி காய்க்காதோ கமலைத் தண்ணி பாயாதோ கிழக்க வரும் சூரியன போல் எனக் கொருத்தன் கிடையாதோ? காசிப் பயறடிச்சான் பத்தினியச் சீரழிச்சான் என்னைக் குல மழிச்சான் எஞ்சனத்தை ஈனம் வச்சான் ஆசை கொண்டேன் தேசத்துல அகப்பட்டேன் கண்ணியிலே வேசை மகனாலே வெளிப்பட்டேன் இத்தூரம் வட்டார வழக்கு: தும்பு-கட்டும் கயிறு, கழண்டது - கழன்றது; கோப்பு-உருவம்; சொகுசு-நலம்; தூத்தல்-சிறு மழை. சேகரித்தவர்: இடம்: S.S. போத்தையா நெல்லை மாவட்டம். அந்த ஆசை வேண்டாம் பெரிய இடத்துப் பையன் அவளைச் சுற்றிச் சுற்றி வருகிறான். அவன் பல மலர்தேடும் வண்டென்று அவளுக்குத் தெரியும்; அவன் முகத்திலடித்தாற்போல் அவள் பாடுகிறாள்! பேரீச்சம் பழமே-நீ பெரிய இடத்துக்கிபீடமே ஏனையா காத்திருக்க? ஏலரிசி வாசகமே வள்ளத்தான் குருவி போல வட்டம் போட்டு வந்தாலும்