பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 காதல் 187 மந்தையிலே நிண்ணாலும்_ உன்ன மடை நாயும் தீண்டாதடி

பெண்: கட்டக்கருத்த மச்சான் வட்டப்பொட்டு போட்ட மச்சான் எந்தப் பொட்டு வச்சாலும் ஏறணுமே ஏலங்கடை

ஆண்: சாலை கடந்து வாடி சந்தைப் பேட்டை கடந்து வாடி ஓடை கடந்து வாடி ஓடிப் போவோம் ரங்கூனுக்கே

   உறங்கிட்டியே சண்டாளி!

இரவில் சந்திப்பதென காதலர் இருவர் முடிவு செய்திருந்தனர். காதலி மெதுவாக வந்து திண்ணையில் இருந்தாள். வீடு பூட்டியே இருந்தது. எதிர் வீட்டில் இருந்த காதலன் குறித்த நேரத்துக்கு மேடை மீது வந்து பார்த்தான். எதிர் வீட்டுக் கதவு பூட்டியிருந்தது; வெகு நேரம் நின்று பார்த்தான். கதவு திறக்கவில்லை. ஆத்திரத்தில் ஒரு கல்லை விட்டெறிந்தான். கலகலப்பு ஏற்பட்டது. வீட்டில் உள்ளோர் விழித்திருக்க வேண்டும். அவள் வீட்டினுள் நுழைந்து கொண்டாள். காலையில் தனியாக அவளைக் கண்ட காதலன் 'உறக்கம் பெரிதென்று உறங்கி விட்டாயா?" என்று கேட்கிறான். அவளோ, 'திண்ணையில் நானிருக்க கல்லை விட்டெறிந்தது உன் உடல் கொழுப்பா?’ என்று சுடச்சுடப் பதிலுக்கு கேட்கிறாள். காதலன்: கார வீட்டு மேலிருந்து

      கல்லை விட்டு நானெறிய 
      உறக்கம் பெருசின்னு 
      உறங்கிட்டியே சண்டாளி:

காதலி:செங்கட்டித் திண்ணையிலே தங்கக்கட்டி நானிருக்க கரியோட மூர்க்கமில்லை கல்ல விட்டு நீ எறிஞ்சே