பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186 தமிழர் நாட்டுப் பாடல்கள்

காதலி: பால் போல் நிலாவடிக்க

      பருத்திக்குள்ள நானிருக்க 
   மின்னுவெட்டான் பூச்சி 
போல-அவன் 

மெல்ல வந்து கூப்பிட்டானே தோழி: இரும்பாலே கிணறு வெட்டி-நீ இருந்து குளிக்கையிலே கரும்பான அத்தை மகன் கையலைச்சுப் போராண்டி காதலி: ஆத்துல ஊத்துத் தோண்டி அவரும் நானும் பல் விளக்க எச்சித்தண்ணி பட்டுதுன்னு-என்னோட எட்டு நாளாப் பேசலியே வட்டார வழக்கு : மின்னுவெட்டான் பூச்சி-மின் மினி, கையலைச்சு-கைவீசி, ஆத்துல, ஊத்து-ஆற்றில், ஊற்று. சேகரித்தவர்: இடம்: S.M. கார்க்கி சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம். சொற் போட்டி காதலர் ஒருவரையொருவர் மிஞ்சும் வகையில் வாது கவிகள் பாடுவார்கள் அப்பாட்டுகளில் ஒருவரையொருவர் திட்டிக் கொள்வதும், குறைவாகப் பேசிக் கொள்ளுவதும், வழக்கம். முதலில் காதலனைக் கிண்டலாகப் பேசுகிறாள். செருப்புக்கும் காசில்லாமல் தும்புச் செருப்புப் போட்டிருக்கிறா னாம் அவன். அப்படியானால் தும்பைப் பூப்போல வெள்ளை வேட்டி அவனுக்கு ஏது? அவன் பதிலடி கொடுக்கிறான். கடைசியில் இருவரும் ரங்கூனுக்குப் போய்விடுவதாக முடிவு செய்கிறார்கள். பெண்: தும்புச் செருப்பு மாட்டி தொழு திறக்க போற மன்னா தும்பைப் பூ வேட்டியிலே துவண்ட மஞ்சள் நான் தானா? ஆண்: மஞ்சள் மணக்கப் பூசி மரிக்கொழுந்தை நெருக்க வச்சு