பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் 185 குலை வாழை நெல்லுக் குத்தி குழையாமல் சோறு பொங்கி இலை வாங்கப் போனசாமி எவளோட தாமுசமோ? நாலு மகிழம் பூவு நாற் பத்தெட்டு ரோஜாப் பூவு நானெடுத்துக் கொஞ்சும் பூவை-இப்ப எவளெடுத்துக் கொஞ்சுறாளோ? இருட்டை இருட்டடிக்க ஈச்ச முள்ளு மேலடிக்க இருட்டுக் கஞ்சா கொடிப்புலியை எவளெடுத்துக் கொஞ்சுறாளோ? எண்ணைத் தலைமுழுகி எள்ளளவு பொட்டுமிட்டு இலை வாங்கப் போனசாமி எவ பிடிச்சு லாத்துறாளோ? பொட்டு மேலே பொட்டு வச்சி புறப்பட்டுப் போன சாமி பொட்டு அழிஞ்ச தென்ன போய் வந்த மர்ம மென்ன? சேகரித்தவர்: இடம்: S.S. போத்தையா நெல்லை மாவட்டம். எட்டு நாளாய்ப் பேசவில்லை இரண்டு பெண்கள் கிணற்றுக்குள்ளிருந்து குளித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுள் ஒருத்தியின் காதலன் அவர்களைக் கண்டும் காணாதது போலப் போகிறான். அதைப் பார்த்த காதலி தனது தோழியிடம் தனியாகப் பருத்தி விளைக்குள்ளிருந்த தன்னை அவன் மெல்ல அழைத்ததை கூறுகிறாள். தோழி, அப்படியானால் இப்பொழுது அவன் கோபித்துக்கொண்டு செல்வதேன்?’ என்று கேட்கிறாள். அது பெரிய விஷயமல்ல. சிறு சச்சரவினால் ஏற்பட்ட ஊடல்' என்கிறாள் காதலி.