பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் 189 ஒரு மச்சமுண்டு காதலி மலைக்குப் புல்லறுக்கச் செல்லுகிறாள். அவன் விறகு வெட்ட அதே பாதையில் செல்லுகிறான். இருவரும் எப்படியோ சேர்ந்து நடக்கிறார்கள். உள்ளத்தின் உவகை பாட்டாக வெளிப்படுகிறது. ஆண்: கல்லருகாம், புல்லருகாம் கடலருகாம் பூந்தோட்டம் புல்லறுக்கப் போற பிள்ளை-நீ பூமுடிஞ்சாலாகாதோ? பெண்: நத்தத்து மேட்டு வழி நான் போறேன் ஒத்த வழி பிச்சிச்சரம் போலே-நீ பின்னே வந்தாலாகாதோ? ஆண்: கண்டாங்கிச் சீல கட்டி கரை வழியே போற புள்ள,-உன் கண்டாங்கிச் சீலையிலே-நான் வண்டாய்ச் சுழலுதனே குளத்திலொரு அல்லியுண்டு கூந்தலொரு பாக முண்டு இடை சிறுத்த அல்லிக்கு இடையில் ஒரு மச்ச முண்டு வட்டார வழக்கு: புள்ள-பிள்ளை. சேகரித்தவர்: இடம்: S.M. கார்க்கி சிவகிரி, மூத்தவள் வயிற்றெரிச்சல் மூத்தவள் வாழ்ந்திருக்கும்போது அவள் கணவன் இளைய தாரத்தை மணந்தான். பல நாட்களுக்குப்பின் மூத்த மனைவி யைச் சந்திக்கிறான். அவர்களிடையே நடக்கும் உரையாடல் வருமாறு: கணவன்: செம்புச் சிலை எழுதி செவத்தப் புள்ள பேரெழுதி வம்புக்கு தாலி கட்டி , , , வாழுறது எந்த விதம்: