பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190 தமிழர் நாட்டுப் பாடல்கள் மனைவி: மாமன் மகளிணுல்ல மறிச்சு வச்சுத் தாலிக் கட்டி மந்தை யோரம் வீட்டைக் கட்டி மாடடையப் போட்டாரில்ல கணவன் கல்லு அடுப்புக் கூட்டி செடிய மறவு வச்சு பொங்கலிட்டுப் பார்த்தாலும் பொருந்தலையே உன்னழகு மனைவி: கூடுணமே ரெண்டு பேரும் குமர கோயில் அன்னம் போல இன்னிப் பிரிந்தாயனா இறப்பதும் நிச்சயம் தான் என்னைய விட்டுட்டு நீ இளையதாரம் கட்டினியே போற வழியிலியே-உன்ன பூ நாகம் தீண்டிராதோ? சேகரித்தவர்: இடம்: S.M. கார்க்கி சிவகிரி, நெல்லை மாவட்டம் கன்னிக் களவு காதலன் கஞ்சிக்கலயம் கொண்டு காட்டுக்குப் போகும் காதலியை கை தட்டிக் கூப்பிடுகிறான். அவள் அவன் மீது சற்றுக் கோபத்தோடு இருக்கிறாள். அத்தை மகனாகிய அவன் ஊரில் இருக்கும்பொழுதே, சொத்துள்ள ஒருவன் அவளைப் பெண் பேசி வரத் துணிந்து விட்டான். இதை அவள் அவனிடம் கூறுகிறாள். அவன் மணம் பேசி வர நேரமில்லை, வேலை அதிகம் என்று சொல்லுகிறான். களவு செய்பவன் நினைத்தால் நேரமா கிடைக்காது? இது கன்னிக் களவுதானே! அவனுக்கு இன்னும் மனம் உறுதிப்படவில்லை. இவ்வாறு அவனுக்கு உறுதியேற்படும்படி சூடு கொடுத்துவிட்டு சந்திரனைப் பார்த்து “நீ மறைந்து கொண்டு என் மச்சானுக்குக் களவு செய்யக் கற்றுக் கொடு" என்று சொல்லித் தனது காதலனைக் கேலி செய்கிறாள்.