இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காதல்
191
காதலி:கஞ்சிக் கலயம் கொண்டு
காட்டுக்கு போகையிலே
கையலைச்சுக் கூப்பிட்டது
காரணத்தைச் சொல்லு மச்சான்
காதலன்: பேரீச்சம் பழமே நீயே
பெரியடத்துக் கிரீடமே
அஞ்சாறு ஆளோட-உன்ன
யாரை விட்டுக் கூப்பிடட்டும்?
காதலி: மணந்திடுவேன் என்று சொல்லி
மாதக் கணக்காயிருச்சு
கழுத்தில் தாலி கட்ட லேனா-நான்
கயத்தப் போட்டுச் செத்திடுவேன்
காதலன்: இடுப்பே ஒரு பிடியே
இன்பமான ரதி கிளியே
மதியான கண்ணே-உன்ன
மறக்க மனம் கூடலியே
காதலி: மாமன் மகனிருக்க
மாலையிடும் சாமியிருக்க
சொத்துக் கையி சாமிபய
சொந்தமிண்ணு வாரானில்ல
காதலன்: காரமுள்ள சுண்ணாம்பாம்
கலயத்தில நீத்தி வச்சேன்
நீத மற்ற சிவகிரில
நிண்ணு போக நேரமில்லை
காதலி: வெள்ளி நிலாவே, நீயே
விடி நிலா ராஜாவே
கன்னி களவு செய்ய
கண் மறைஞ்சால் ஆகாதோ?
காதலன்: செவந்திப்பூப்போல உன் திரேகம்
வாழுத வயதிலேயே
வாடி பொண்ணே ஓடிப் போவோம்
இலுமிச்சங்கனி போல
இருவருமே ஒரு செகப்பு
வாழுத வயதிலேயே