பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202 தமிழர் நாட்டுப் பாடல்கள்

    பதினான்கு வருஷங்கள்
  அவளது காதலன் தண்டிக்

கப்பட்டு சிறைக்குபோய் விட் டான். பதினான்கு வருஷம் தண்டனை. அவள் மனம் செய்துகொள்ளாமலே இருந்தாள். அவள் சோறு தண்ணீர் இல்லாமலே சுக்குப்போல் உலர்ந்து விட்டாள். அவன் கவலையில்லாமல் மதுரைச் சிறையில் வாழ்ந்து வருகிறான். அவனுக்கு எட்டுமாறு என்ன பாட்டுப் பாடுவது என்று அவள் யோசிக்கிறாள்.

  சாமி எனக்காகுமா? 
  சதுரகிரி பொட்டாகுமா ? 
  நெலாவும் பொழுதாகுமா ? 
  நெனச்ச சாமி எனக்காகுமா ? 
  ஆசை தீர அணைஞ்ச கையி 
  அவரு மேல போடும் கையி 
  பன்னீரளைஞ்ச கையி 
  பதினாலுவருஷ மாச்சே ! 
  சுக்குப் போல நானுலர்ந்து 

சோறு கறி செல்லாம-மதுரையில கொக்குப் போல் அவரிருக்க-

                     நானு 
சோலக் கிளி வாடுதனே! 
சாலையில சமுத்திரமே
சாமி கையில் புஸ்தகமே 
என்னத் தொட்ட மன்னவர்க்கு 
என்ன கவி பாடட்டும் ?

சேகரித்தவர்: இடம்: S.M, கார்க்கி. சிவகிரி,

           நெல்லை மாவட்டம்.
     
        வைப்பாட்டி
ஒரு உயர் ஜாதி வாலிபன் பள்ளர் ஜாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்தான். சாதிக் கட்டுப்பாடுகளால் அவளை மணம் செய்து கொள்ள முடியவில்லை. ஆனால் இருவரும் குடும்பங்களைத் துறந்து ஒரு குடிசை கட்டிக் கொண்டு தனியாக வாழ ஆரம்பித்தனர். இருவரும் கருத்தொருமித்துக் கணவன் மனைவியுமாக வாழ்ந்தனர்.