பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 காதல் 203 ஒரு நாள் அவனுடைய முறைப் பெண் அவனைப் பார்க்கிறாள். "நாட்டில் மழை பெய்யவில்லை. நீதி தவறினால் மழை பெய்யாது அல்லவா? நீ வைப்பாட்டி வைக்கப்போய் ஊருக்கே பஞ்சம் வந்து விட்டது"என்று சொல்லுகிறாள். அவன் தனது செய்கையை நீதியற்ற செய்கை என்று நினைக்கவில்லை. அவளை வைப்பாட்டி என்றும் கருதவில்லை. அவளைத் தன் மனைவியாகவே அவன் நினைக்கிறான். "அவளை விட்டு நான் வரப்போவதில்லை" என்று சொல்கிறான். பெண்:மழைக்கே அதிகாரி

      மார்க்கமுள்ள சுக்கிரரே 
      வப்பாட்டி தேடப் போயி 
      வாடுதையா நம்ம தேசம்

ஆண்:வாடுனா வாடுதடி

     வரப்பு வசங்குதடி 
     ஓடிவரவும் மாட்டேன் 
 தேவேந்திரப் பெண்ணை விட்டு 
    சாதிப் பிரிவு தானா 

சாத்திர மெல்லாம் ஒண்ணுதானே

   மருவில்லா மாங்கனிய 
   மறக்கமனம் கூடுதில்ல

வட்டார வழக்கு : தேவேந்திரப் பெண்-பள்ளர் சாதிப் பெண்.

சேகரித்தவர்: இடம்: S.M.கார்க்கி நெல்லை மாவட்டம்

    பெண்குடம் போனால்
 அவன் என்ன கேட்கிறான், அவள் என்ன பதில் சொல்கிறாள் என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். தமிழ் மகளின் பண்பாட்டுப் பெருமையை காதல் விளையாட்டில் கூட அவள் நிலைநாட்டுகிறாள். 

ஆண்:மண் குடம் கொண்டு

  மலையோரம் போற புள்ளே!     மண் குடம் வச்சுப்போட்டு-உன் பெண் குடம் ரெண்டும் விலை 
            சொல்லடி