பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

     தமிழர் நாட்டுப் பாடல்கள்

ஒர் இளைஞனைக் காதலிக்கிறாள். ஊரையெல்லாம் மறந்து அவனையே நினைத்துக் கொண்டிருக்கும் அவள் நிலையைப் பற்றி அவன் நினைத்துப் பார்க்கவில்லையென்று அவள் குத்திக் காட்டுகிறாள். தெரு வழியே செல்லும் தன் காதலன் காது கேட்க அவள் தனது மன வருத்தத்தை வெளியிடுகிறாள்.

பெண் :

   மார்க்கத் துண்டு போட்டு
   மேக்காம போற சாமி-ஒம்ம
   மார்க்கத் துண்டுலயே
   மாயப் பொடி மணக்கும்
   காய விட்டேன் கரும் புழுதி
   கனிய விட்டேன் இனிய பழம்
   மேய விட்டேன் என் கோழி
   மேலத் தெருச் சாவலோட
   ஊர உறவெழந்தேன்
   ஒத்தமரம் தோப்பெழந்தேன்
   பேரான சிவகிரிய
   பிறப்பிலயும் நான் மறந்தேன்
   கடல பொரி கடல
   கை நெறஞ்சு என்ன செய்ய?
   கண்ணுக்கு உகந்த கனி
   ஒண்ணு தின்னால் போதாதோ ?


   சேகரித்தவர்:           இடம்: S.M. கார்க்கி              சிவகிரி,
                 நெல்லை மாவட்டம்.


            காதல் 
     இனி காத்திருக்க முடியாது
   முத்தம்மாள், முத்தையாவின் மீது காதல் கொண்டாள். அவர்கள் அடிக்கடி சந்தித்தார்கள். இவர்கள் நட்பு ஊரில் அம்பலமாயிற்று. வீட்டில் கட்டுக்காவல் அதிகமாயிற்று. அவனது வீட்டார் முறையோடு வந்து பெண் கேட்டால், அவளை அவனுக்கு மணம் செய்து வைக்க சம்மதமே. அவன் வெட்கப்பட்டுக் கொண்டு தன் வீட்டில் சொல்லாமலே இருந்தான். அவனைச் செயலுக்குத் தூண்டுவதற்காக முத்தம்மாள் அவன் காது கேட்கட் பாடுகிறாள். அவன் சாலை வழி வருவதைக் கண்டும் காணாதவள் போல அவளிடம் சொல்ல