பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



220

தமிழர் நாட்டுப் பாடல்கள்

                உன்னோட நானுரச 
                உலகம் பொறுக்கலையே 
                வெத்தலை தந்தவரே 
                வினையிழுத்துவச்சவரே 
                போயிலை தந்தவரே 
                போதுமையா உம்முறவு
ஆண்:         பார்த்தனடி உன் முகத்த 
               பகைச்சனடி என் சனத்த 
               கேட்டனடி கேவலங்கள் 
               கிளிமொழியாள் உன்னாலே 
               அருகுபத்திப் பிஞ்சையிலே 
               ஆகுருவி விரட்டையிலே 
               சொருகு கொண்டை வெள்ளையம்மா 
               சொல்லுக் கிடம் வச்சவளே 

வட்டார வழக்கு: அருகுபத்தி-அருகம்புல் படர்ந்த; வச்சவரே-வைத்தவரே,வச்சவளே-வைத்தவளே:ஆகுருவி-புஞ்சைக்கு வரும் குருவி.

சேகரித்தவர்:
இடம்:
S.S. போத்தையா
தங்கம்மாள்புரம்,
விளாத்திகுளம்,
நெல்லை மாவட்டம்.


ஒரு பலனும் நானறியேன்

'பலனறியாமல் பழி மட்டும் சுமந்தேன். உன் மேல் ஆசை வைத்ததுண்டு. ஆனால், ஊரார் பேசுவதுபோல் ஒன்றும் நடக்கவில்லையே! பூவைப் பார்த்து பறிக்க எண்ணியதுண்டு. ஆனால் பூவை பறித்து முகரவில்லையே! பூவைப் பறித்துச் சூடிக் கொண்டதாக ஊரார் பழி சொல்லுகிறார்களே' என்று இப்பெண் வருந்துகிறாள்.

               நந்தவனம் துறக்க வில்லை 
               நானொரு நாள் போகவில்லை 
               பூவாத முல்லைப் பூவை 
               பூத்ததென்று சொல்லவில்லை 
               வட்ட ஓடையைக் கண்டேன் 
               வடக்கே போற கொப்பைக் கண்டேன்.