பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 காதல் 229

தொடை வாளை நானாவேன் ஏலேலோ சாமி ஏலேலோ கூட்டிக் கூட்டி எடுப்பாங்க ஏலேலோ சாமி ஏலேலோ குள்ளாங் கொண்டை நானாவேன் ஏலேலோ சாமி ஏலேலோ சேத்திச் சேத்தி எடுப்பாங்க ஏலேலோ சாமி ஏலேலோ சேலு கெண்டை நானாவேன் ஏலேலோ சாமி ஏலேலோ

சேகரித்தவர்: சடையப்பன் இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.

     சின்ன மாமா
 செலவில்லாமல், காதலியை அழைத்துக் கொண்டு போய் மணம் செய்து கொள்ள விரும்புகிறான், மாமன் முறையுடைய உறவினன். அவள் பலரறிய மணம் செய்து கொள்ள வேண்டுகிறாள். அவனோ கருமி, அதற்கு மனம் வரவில்லை. அவனிடம் அவள் கண்டிப்பாகப் பேசுகிறாள். "மாட்டைக் கொண்டு போவதானாலும் தலைக்கயிறு வாங்க கால் பணம் செலவு செய்ய வேண்டும். பெண்ணை அழைத்துப் போக அதுகூட செலவு செய்ய மாட்டாயா," என்று அவள் கேட்கிறாள்.

கட்டுக் கவுறு காப்பணமா

  டே-சின்ன மாமா 

கட்டிப் போடப் பாக்கிறயா

  டே-சின்ன மாமா ஓட்டாங்கச்சியா ஒரு பணமா
  டே-சின்ன மாமா! என்னை ஓட்டிப் போய்ட பாக்கறியா
  டே-சின்ன மாமா

வட்டார வழக்கு: கவுறு-கயிறு, ஓட்டாங்கச்சி - ஓட்டுத்துண்டு; போய்ட-போய் விட.

சேகரித்தவர்: சடையப்பன் இடம்: சேலம் மாவட்டம்.