பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228 தமிழர் நாட்டுப் பாடல்கள்

ஜோடி பிரிஞ்சவுடன் சோர விட்டேன் கண்ணீரை

வட்டார வழக்கு: நாரைவந்து மீனைத் தொட-புதிய பெண் வாழ்க்கையில் தலையிட்டு என் ஜோடிமீனைக் கொத்தி விட்டாள்; தீன்-தீனி, தின்னுவது; போனண்ணிக்கு - போன அன்றைக்கு.

சேகரித்தவர். S.S. போத்தையா இடம்: சூரங்குடி, விளாத்திகுளம் வட்டம், நெல்லை மாவட்டம்.

       தூண்டில் மீன்
 காதல் பாட்டாயினும் தொழிலின் மணம் அதில் வீசுவதைக் காணலாம். களை பிடுங்கும்போதும், அறுவடையின்போதும், ஏருழும்போதும், மலையேறி விறகொடிக்கும்போதும், புல்லறுக் கும்போதும், முகிழ்த்து மலரும் காதலை வெளியிடும் பாடல் சூழ்நிலையின் பின்னணியையும் சித்திரிக்கிறது. நாட்டுப் பாடலின் சிறப்பு அம்சம் அதுதான். தொழிலும் காதலும் இணைந்து செல்லுகின்றன.
 இங்கு மீன் பிடிக்கும் தொழில் செய்யும் குடும்பத்தில் தோன்றிய இளநங்கை தனது காதலை வெளியிடுகிறாள். காதல், கற்பனையோடு கலந்து தொழிலின் உவமைகளை மேற்கொண்டு பாட்டாகப் பிறக்கிறது.
 இப்பாடலில் தொழிலின் மணம் வீசுவதைக் காணலாம். இது தோணிப்பாட்டாகவும் அமைந்திருக்கிறது.

ஏரியும் பெரியேரியாம் ஏலேலோ சாமி ஏலேலோ அக்கரையும் பொன்னேரியாம் ஏலேலோ சாமி ஏலேலோ பொன்னேரிக் கரையின் மேலே ஏலேலோ சாமி ஏலேலோ போட்டானாம் தூண்டி முள்ளு ஏலேலோ சாமி ஏலேலோ தூண்டிக்கும் துண்டாவேன் ஏலேலோ சாமி ஏலேலோ