பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 காதல் 227

கூடுனமே கூடுனமே கூட்டுவண்டிக் காளை போல விட்டுப் பிரிஞ்சமையா ஒத்த வண்டிக்காளை போல பின்கல்லு மோதிரமே பிரியாத சினேகிதமே பிரியிறகாலம்வந்து பேரு சொல்லிக் கூப்பிடுறேன். தொட்டேன் சிவத்தாளை தூது விட்டேன் தன்னாளை மறந்தேன் சிவத்தாளை மாசம் பன்னிரண்டாச்சே அச்சடிச் சேலை வாங்கி அஞ்சு மாசம் வச்சுடுத்தி முந்தி கிழிய முன்னே முறிஞ்சதையா நம்முறவு கருத்தக் கருத்த சாமி கைக்கு மோதிரம் தந்தசாமி உருவங் குலைத்த சாமி உருவிக்கோடா மோதிரத்தை முத்துப் பல்லு நல்லாளு முகத்திலேயும் சித்தாளு பாக்குத் திங்கும் நல்லாளு பகைத்தேனே சொல்லாலே சேர்ந்து இருந்தோமையா சேலத்துக் கொண்டை போல நாரை வந்து மீனைத் தொட நைந்ததையா நம்முறவு வெள்ளை உடுப்பிழந்தேன் வெத்தலைத் தீன் மறந்தேன் வஞ்சிக் கொடி போனண்ணிக்கு கஞ்சிக்குடி நான் மறந்தேன் லோட்டா விளக்கிவச்சேன் ரோசாப்பூ நட்டி வச்சேன் லோட்டா உடைஞ்சிருச்சு ரோசாப்பூ வாடி நிக்கேன் சோளத்துக் குச்சிலிலே ஜோடிப் புறா மேயயிலே