பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

236 தமிழர் நாட்டுப் பாடல்கள்

ஆல விளாறு போல

அந்தப் பிள்ள தலை மயிராம்

தூக்கி முடிஞ்சிட்டாலும்

தூக்கணாங் கூடு போல

கொண்ட வளர்த்த பிள்ளா

கோத கண்ணி மாதரசி

கொண்டாடி தலை மயித்தை

கொடுங்கையிலே போட்டுறங்க!

நில்லடி கட்டப் பிள்ளா

நிறுத்தடி கால் நடைய

சொல்லடி வாய்திறந்து

சொந்தக் கணவனிடம்

ஆத்துக்குள்ள ரெண்டு முட்டை

அழகான கோழி முட்டை

கோழி முட்டை வாடுனாலும்

குமரி முகம் வாடுதில்ல

வட்டார வழக்கு: அருவா-அரிவாள் (பேச்சு); பூவோச ரம்பு-பூவரசம்பூ (பேச்சு); தண்டட்டி-காலணி, கைமசக்கம் - மிகுந்த மயக்கம், பிள்ளா-பிள்ளை, பெண்; கோதகண்ணி-கோதை, மாலை; கண்ணி-பூச்சரம்.

சேகரித்தவர்: இடம்: M.P.M.ராஜவேலு தூத்துக்குடி

                    வட்டாரம்.

தென்னைமரம் அடையாளம்

நாற்று நடும்போது பிறரிடமிருந்து விலகி நிற்கும் தனது காதலியின் கையை காதலன் பிடித்துக் கொள்ளுகிறான்.அங்கு மிங்கும் பார்த்துவிட்டு அவள் கையை விடுவித்துக் கொள்ளுகி றாள். அவன் பிறர் நிற்பதை எண்ணாமல் தன்னை மறந்தது ஏனென்கிறாள்.அவள் அவனைக் கண்டிப்பது போலப் பேசி, தனியாகச் சந்திக்க இடத்தையும் குறிப்பிடுகிறாள்.

காதலன்:

தோழி துணை இருக்க

தொட்ட கையி பூமணக்க

எட்டிப் புடிச்ச கையி

எட்டு நாளும் பூமணக்க!

காதலி:

ஆத்துக்கு அந்தப் பக்கம்

ஐயரு புஞ்செய் நாத்துக்குள்ளே