பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

245

காதல்


காதலன்:

கூடமும் தானறியேன்
குளிர்ந்த சாலை நானறியேன் அடையாளம் சொன்னியானால் அங்கு வந்து சேர்ந்திடுவேன்

காதலி:

கெண்டை கொண்டு தூண் நிறுத்தி
கெளிறு கொண்டு வளைபரப்பி அயிரை கொண்டு மேஞ்சிருக்கும் ஆசாரக் கூட மது

வட்டார வழக்கு: ஆசாரக் கூடம்- மணமேடை

குறிப்பு: கடற்கரையில் வாழும் மக்களின் வாழ்க்கையிலி ருந்து உவமைகள் எடுத்தாளப்பட்டன. ஆகவே கடற்கரை மக்களின் படைப்பாக இப்பாடல் இருக்கலாம். கெண்டை, கெளிறு, அயிரை மீன் வகை. மீன் போல் தோரணம் கட்டுவது தமிழ் நாட்டு வழக்கம்.

சேகரித்தவர்:
இடம்:
M.P.M.ராஜவேலு
தூத்துக்குடி வட்டம்,
நெல்லை மாவட்டம்.

நான் ஆசை கொண்டேனையா!

காதலர்கள் அடுத்து இருக்கும் இரு வீடுகளில் வசிப்பவர் கள். தனியாகச் சந்தித்து உறவாடும் வாய்ப்புகள் பல கிட்டின. அவர்கள் சந்திப்பின் போது உரையாடுகிறார்கள். காதல் கிறுகிறுப்பில் பேசும் பேச்சுகளில் ஆழ்ந்த பொருளைக் காணமுடியுமா?

ஆண்:

கரும்பைத் துரும்பாக்கி
கல்துணை வில்லாக்கி விரும்பாமப் போற பொண்னே வேலி எட்டிப் பாக்கலாமோ உலக்கை போடும் கைதனிலே ஓசையிடும் வளையல் சத்தம் சண்டான வனையில் சத்தம்
சடை சொல்லிக் கூப்பிடுது

பெண்:

கொண்டது குடுமித்தலை
கொஞ்சினது பம்பைத்தலை