பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
246

தமிழர் நாட்டுப் பாடல்கள்


அள்ளி முடியுமுன்னே ஆளைக் காண முடியலியே

ஆண்:

ஒட்டுச் சுவருன்னு ஒரு நாள் ஒதுங்கப் போயி
கட்டிச் சதுரமெல்லாம்
கசறாக உருகுதடி
செம்பாதி நேரத்திலே
சேர்ந்து நீ வந்த புள்ளே-இப்போ வம்பான வார்த்தை பேசி வார்த்தைக்கிடம் பண்ணாதே கண்டு உறவானோம்
கண்டொரு நாள் பேசினோம் இன்னொரு நாள் பேசுதற்கு இரங்கலியே உன் மனசு

பெண்:

கருப்போ கருப்பழகு கந்தசாமி தன்னழகு
அருப்பம் அழகுக்கல்லோ ஆசை வெச்சேன் உன் பேரில்

ஆண்:

கன்னம் புருவத்துக்கும் கண்ணுருக்கும் தேமலுக்கும் சின்ன முகத்துக்கும்
சிறியாள் வணக்கினாளாம்

பெண்:

வயக்காட்டைப் பாத்து விட்டு வரப்போரம் வார சாமி வரப்பு வழுக்கிச்சின்னு
வகை மோசம் வந்ததையா

ஆண்:

எப்படி வழுக்கினாலும் என்ன செய்யப் போகுதடி
உன் மனசு இருக்கும் போது ஊக்கத்தைக் கை விடாதே

பெண்:

வேப்பம்பூ பூக்காதோ விடிந்தால் உதிராதோ
நேற்று வந்த தோழனுக்கு
நேரம் தெரியாதோ