பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
247

தமிழர் நாட்டுப் பாடல்கள்


ஆண்:

மாலையிலே மாட்டைக் கண்டேன்
மலைக்குக் கீழே புல்லைக்கண்டேன்
சாமி மவ கொண்டையிலே செவ்வரளிப் பூவைக் கண்டேன்

பெண்:

 மறந்தாலும் மறந்திடுவேன்
மருந்து தின்னா ஆறிடுவேன் நல்ல நான் ஆசை வச்சேன்
நான் மறக்கப் போறதில்லை எண்ணைத் தலையழகா எழுத்தாணி மீசைக்காரா
கோவில் பிறையழகா கொல்லுதையா உன் ஆசை பொட்டுக்கடுக்கத்துக்கும்
ஒதுக்கி விட்ட சிமிட்டாவுக்கும் ஒட்டிய கிராப்புகளுக்கும்
நான் ஆசை கொண்டேனையா

வட்டார வழக்கு: கசறு-கயிறு: அரும்பம்-மீசை; வணக்கினாள்-வணக்கம் செய்தாள்.

குறிப்பு: 1. தன் மனத்தை கரும்புக்கும் கல்துணுக்கும் ஒப்பிட்டு கரும்பை துரும்பாக இளைக்கவும் கல்துணை வில்லாக வளைக்கவும், காதலிக்குச் சக்தியுண்டு என்கிறான். சண்டாள வளையல்-வளையல் ஒலி தன்னை வேதனைக்குள் ளாக்குவதால் அதனை சண்டாள வளையல் என்று திட்டுகிறான். குடுமித்தலை அவிழ்ந்து விட்டது.

2. காதல் களிப்பில் நேரம் போனது காதலனுக்குத் தெரியவில்லை. பூத்த வேப்பம் பூ உதிர்ந்து விட்டது. அது பூத்திருந்த கர்லமெல்லாம் அவர்கள் காதல் இன்பத்தில் திளைத்திருந்தனர்.

சேகரித்தவர்:
இடம்:
M.P.M. ராஜவேலு
தூத்துக்குடி வட்டாரம்,
நெல்லை மாவட்டம்.

வாசல்படி காக்கிறேன்!

தனது காதலனைக் கண்டு சீக்கிரம் தன்னை மணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டுமென அவள் சொல்ல விரும்புகிறாள். ஆனால் அவன் தெரு வழியே வரக்