பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் 261 ளைப் பரிமாறிக் கொள்ளுகின்றனர். இருவரும் உழைத்து மனநிறைவோடு வாழ்கின்றனர். ஒருவருக்கொருவர் ஆதரவாகப் பேசிக் கொள்ளுவதைக் காணும்போது நமக்கு அவர்கள் கருத்தொருமித்து வாழும் தம்பதிகள் என்பது தெரிகிறது. பெண்: ஆளுக்கு ஆளழகு ஆவரைப் பூவழகு மஞ்சு முழியழகு மயங்கினனே உன்னாலே ஆண்: முட்டியிலே சோறு பொங்கி மூடு வச்ச முன்னாலே தவலை சோறு பொங்க தவம் பெற்றது யாராலே? பெண்: கொத்துக்கில்ல முத்தளந்து குணத்துக்கோ வழி நடந்து-உங்க அமிர்த குணத்துக்கில்ல-நான் அங்கிருந்து இங்கி வந்தேன் ஆண்:பட்டுக்கரை வேட்டிலியே பாலூத்திச் சோறு கட்டி கிட்டருக்கும் கட்டுச் சோத்த தின்போம் வாடி பெண் மயிலே சேகரித்தவர்: இடம்: S.M. கார்க்கி சிவகிரி, நெல்லை மாவட்டம். பழைய காதலி அவன் அழகான நங்கை ஒருத்தியைக் காதலித்தான். அவள் குடும்பத்தார் எளியவர்கள். இடையில் அவனைவிட மூத்த பெண்ணொருத்தியை அவனுக்கு மனம் பேசினார்கள். அவளிடம் சொத்திருந்தது. அவன் இருந்து சாப்பிடலாம். இப்பாது காப்பை எண்ணி அவன் மனத்திற்குச் சம்மதித்தான். மணமாயிற்று. அவன் மனைவி வீட்டிற்குப் போய் விட்டான். அவளுடைய நிழலில் வாழ்ந்தான். அவளைக் கண்டு பயந்து அவள் சொற்படி நடந்து வந்தான். அவர்களுக்கு குழந்தை ஒன்று பிறந்தது. ஒருநாள் கணவனும் மனைவியும், கணவனது ஊருக்கு வந்தார்கள். பழைய காதலி அவனைச் சந்திக்கிறாள்.