பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் 267 புள்ளி போட்ட லவுக்கக்காரி புல்லறுக்கப் போகையிலே பூ முடிந்தா லாகாதோடி வெள்ள வெள்ளச் சீலைக்காரி வெள்ளரிக்காய் கூடைக்காரி கோம்பை மலை வெள்ளரிக்காய் கொண்டு வாடி திண்ணு பார்ப்போம் மஞ்சள் அறைக்கும் புள்ள மதி லெட்டிப் பாக்கும் புள்ள கொஞ்சம் வளர்ந்தையானா கொண்டு போவேன் ரெங்கத்துக்கு அலுக்கு குத்தி துலக்க புள்ள ஆபரணம் போட்ட புள்ள அலுக்கக் கழுத்துனாலும் துலுக்கத்தனம் போகுதில்லை ஆல மரத்தைப்பாரு அதுக்குத் தெக்க கிணத்தப் பாரு செப்புக் குடத்தைப் பாரு சிறுக்கி போற ஒயிலைப் பாரு (பெண்கள் பாடுவது) எண்ணைத் தலையழகா எழுத்தாணி மூக்கழகா கோயில் சிலை யழகா கொல்லுதடா உன்னாசை வாழைப் பழமும் போச்சு வச்சிருந்த வைப்பும் போச்சு தலையைச் சிரைக்கப் போயி தாழம்பூ வாசம் போச்சு காணம் கருங் காணம் கறிக் கேத்த கொத்தமல்லி மானங் கெட்ட அத்தானுக்கு மதுரையில வைப்பாட்டி அஞ்சாறு வீடுகளாம் அதுல ரெண்டு இள வட்டமாம் நாயடிக்க ஏலாட்டியும் நாணயங்க ரொம்ப உண்டாம் இந்த நடை ஏது?