பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268 தமிழர் நாட்டுப் பாடல்கள் இடுப்பிலொரு கையேது: மையேது பொட்டேது மதி குலைந்த மன்னவர்க்கு? காத்துட்டுக்கு லேஞ்சி வாங்கி கன்ன மெல்லாம் சுங்கு விட்டு சுங்குக்கு மேலாக சுத்துதடா சீலைப் பேனு மானா மதுரைச் சட்டி வாசலுல போட்ட சட்டி எங்க மச்சான் குடிச்ச சட்டி எடுத்துவுக கொடுத்திருங்க பாதையிலே போற வனே படர்ந்த காவிப் பல்லுக்காரா நீல முழிக்காரிக்கு நீ தாண்டா மாப்பிள்ளை சேகரித்தவர்: இடம்: M.P.M. ராஜவேலு விளாத்திகுளம், நெல்லை மாவட்டம். முறைப் பாட்டு சிறு மிளகாய் உறைக்கலையோ? மாப்பிள்ளை பெண் முறையுடையவர்கள் கேலி செய்து பேசும் பேச்சுக்கள் கொண்ட பாடல்களை முன்னர் கண்டோம். அவை நெல்லை மாவட்டத்தில் கிடைத்தவை. சேலம் மாவட்டத்திலும் இத்தகைய பாடல்கள் பாடப்படுகின்றன. ஆண்: தன்னந் தனியாகவே தான் தட வழியே போற புள்ளே தாலி கட்டப் போறேண்டி தடை ஒன்றும் சொல்லாதேடி பெண்; முன்கைப் பலமுமில்லை முகத்தில ரும்பு மீசையில்லை நானுனக்குப் பெண்டாட்டியா? நாடெங்கும் சொல்லாதேடா ஆண்: சிறு கத்திரி காய்க்கலையா? சிறு மிளகாய் உறைக்கலையா?