பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284. தமிழர் நாட்டுப் பாடல்கள்

கால் நடையா வரலாமா கள்ளுக் கடை போவாராம் கையில் மொந்தை எடுப்பாராம் என்ன வென்று கேட்டால் பசும்பால் என்று சொல்வாராம் குதிரையடி போலே கொழுக் கட்டை நூறுவச்சேன் அத்தனையும் தின்னானே அந்த உதடி மவன் ஆனை அடி போலே அதிரசம் நூறுவச்சேன் அத்தனையும் தின்னானே அந்த உதடி மவன்

வட்டார வழக்கு : அந்திரயில் தெரியாதவன்-மாலைக் கண்ணன், உதடி-வசைச்சொல், இந்த வசைகள் எல்லாம் மணமகனுக்காகி வந்தது.

சேகரித்தவர்: வாழப்பாடி சந்திரன் இடம்: வாழப்பாடி, சேலம் மாவட்டம்.

திருமணம் திருமணத்திற்கு முன் தாலி செய்து கொண்டு மணமகன் வீட்டார் பெண் வீட்டிற்கு வருவார்கள். அவன் வரும்போது மணப் பெண் வீட்டில் கூடியிருக்கும் பெண்கள், பெண்ணை அலங்காரம் செய்து கொண்டே மணமகனது வரவை, அவளுக்கு எடுத்துக் கூறுவார்கள்.

வாராண்டி, வாராண்டி வரிசை கொண்டு வாராண்டி பாக்கு எடுத்துக்கிட்டு பரியங் கொண்டு வாராண்டி புத்தம் புதுச் சேலை பொன்னான சவிரி செஞ்சி தங்கத்தாலே தாலிபண்ணி தடம் புடிச்சி வாராண்டி சந்தனப் பொட்டழகன் சாஞ்ச நடையழகன் கூறை சீலை கொண்டுகிட்டு குதிரை ஏறிவாராண்டி