பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

திருமணம் 287

இத் தனையும் பெற்றாளாம் இளங் கொடியாள் தங்காளாம்

மங்கல வாழ்த்து

சேலம் மாவட்டத்தில் வேளாளர் திருமணங்களில் கீழ்வரும் மங்கல வாழ்த்து பாடப்படும். வடமொழி மந்திரங்கள் உழைப்போர் குடும்பங்களில் நடைபெறும் திருமண வினைகளில் இடம் பெறுவதில்லை. இதற்கு முன்னர் இரு மங்கல வாழ்த்துக்கள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. தாலி கட்டியவுடன் பாடப்படும் பாடல் இது.

புராண புராண வேதம் வைய சாங்கியம் காராள வேதருக்கும் பாலா புளியாக்கா ஈண தொரு மல்லி இன மல்லி நன்றாய் வேற்றம் செம்பக மல்லி நல் மாட்டுச் சாணம் கொண்டு நல் சதுரம் வழிச்சு சர்க்கரை குத்தி சம்பா அரைத்து வளமுள்ள தோட்டி கொள மாளித்து மாமன் கொடுக்கிற வரிசையைக் கேளு நாக மோதிரம் புல்லை சரப்பளி மேல் காது வாளி வெள்ளை வெத்திலை வீராணம் பாக்கு பத்து விரலுக்கும் பசியாணி மோதிரம் எட்டு விரலுக்கும் எணியான மோதிரம் மூங்கில் போல் சுற்றம் முசியாமல் வாழ்ந்து