பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

288

தமிழர் நாட்டுப் பாடல்கள்



அருகுபோல் வாழ்ந்து
ஆல் போல் தழைத்து
இரு பேரும் பிரியாமல்
காராள வம்சம்
சுகமாக வாழ

குறிப்பு: வேளாளர்களுக்கு சாங்கியம் வேதம் என்று குறிப்பிடப்படுகிறது.

தழைத்துக் கிளை விடுவதற்கு மூங்கில், அருகு, ஆல் இவை போல் செழித்து வளர வேண்டும்.

சேகரித்தவர்: சடையப்பன் இடம்: அரூர்.


வாழ்த்து

அலை கடல் அமிர்தம்
திங்கள் மும்மாரியும்
செல்வம் தழைய
மணவறை வந்து
மங்களம் பாடுவோம்
நல்ல கணபதியை
நால்காலுமே தொழுதால்
அல்லல் வினைகளெல்லாம் அகலுமே
தும்பிக்கையோனை
தொழுதால் வினை தீரும்
நம்பிக்கை உண்டு நமக்கே வினாயகனே
கந்தரும் முந்திடும்
கருகிமா முகத் தோனும்
சந்திர சூரியர்
தானவர் வானவர்
முந்தியோர் தேவரும்
முனிவரும் காத்திட
நல்ல கல்யாணம்
நடந்திடச் செய்ததும்
தப்பித மில்லாமல்
சரஸ்வதி சரணம்
சீரிய தனமும்
தனமுள்ள கனியும்