பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணம்

289


பாரியோர் கதலி
பழமுடன் இளநீர்
சர்க்கரை வெல்லம்
கனியுடன் பலாச் சுளை
எள், அவல், பொரியும் இஷ்டமுடன் தேங்காயும்
பொங்கல் சாதம்
பொறி கறியுடனே செங்கையினாலே
திருட்டிகள் பிடித்தார்
நினைத்ததை எல்லாம்
மனத்துடன் பலியும்
கிரேதா திரேதா
கலியுகம் தன்னில்
சேரன் சோழன்
பாண்டியன் கூட
செம்மையுடனே
சிறந்திடும் மங்களம்
தாயது சுற்றம்
வாழ்வது பொருத்தம்
இந்த நாளுக்கு
இனியந்த நாளுக்கு
பக்குவம் கண்டு,
பருவம் கண்டு
திக்கிலுள்ள பேரும்
சில பேரும் கூடி
வேதியர் பக்கம்
விரைவுடன் சென்று
ஜோதிடர் அழைத்து
சாஸ்திரம் கேட்டு
இந்தப் பெண்ணையும்
இந்த மாப்பிள்ளையையும்
இருவர் பேரையும்
ராசிகள் கேட்டு
கைத்தலம் ஓடிய
கைத்தல பொருத்தம்
ஒன்பது பொருத்தம்
உண்டெனக் கேட்டு