பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணம் 295 அருமையுள்ள பந்தலிலே அனைவரும் சூழ்ந்து நிற்க பெருமையுள்ள பந்தலைப் பூவால் அலங்கரித்தார் நாள் கலசம் நட்டு நல்ல முகூர்த்தமிட்டு பேக் கரும்பை நட்டு பெருமன்னம் போட்டு வைத்து சாரும் கரகமும் சந்திர சூரியரும் அம்மி வலமாக அரசாணி முன்பாக ஆயிரம் பெருந்திரி அதற்கும் வலமாக போயிருந்தார்கள் பெருமையுடன் வாழ்ந்திடுவோர் சுத்தமுடன் கலம் விளக்கி சோறரிசி பால் பழமும் பத்தியுடன் தானருந்தப் பணித்தார் மாமன்மாரை அருந்தி முடித்தவுடன் அருகு வந்து தாய்மாமன் பொட்டிட்டுப் பூமுடித்தார் பேடாம் மயிலையர்க்கு பட்டமது கட்டினார் பாரிலுள்ளோர் பார்த்திருக்க கொத்து மாலையைக் கொண்டையில் கட்டி சித்திரக் கலசம் நெற்றியில் துலங்க அலங்கரித்த பெண்ணை அலங்காரமாய் மாமன் மணமகன் அருகில் அழைத்து வந்தார். இராமர் இவரோ, லட்சுமணர் இவரோ காங்கேயன் இவரோ, கருணீகர் இவரோ