பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடும்பம் 309 கொடுக்கப்பட்ட பின்னர், அவர் உறவல்லாத ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டார். கிழவருக்குக் குமரியையும், குழந்தைக்குக் குமரியையும், மணம் செய்து வைப்பது சமீபகாலம் வரை வழக்கில் இருந்து வந்தது. தங்கையின் மகளை மணம் செய்து கொள்வது பரவலான வழக்கம். மகளின் மகளை மனம் செய்து கொள்வது ஆண்களுக்கு விலக்கப்பட்டதாக இருந்ததில்லை. கீழ்வரும் பாடலில் காதலித்தவனை மணம் செய்து கொள்ள முடியாமல் கிழவனுக்கு வாழ்க்கைப்பட்ட ஒரு பெண் மனம் குமுறிஅழுவதைக் காணலாம். சோளச் சோறு திங்க மாட்டேன் சொன்னபடி கேட்க மாட்டேன் நரைச்ச கிழவங் கிட்ட நானிருந்து வாழ மாட்டேன் நாணலுத் தட்டை போல நரைச்ச கிழவனுக்கோ கோவப் பழம் போல குமரி வந்து வாச்சனல்லே! செம்புல சிலை எழுதி சிவத்தப் பிள்ளை பேரெழுதி வம்புல தாலி கட்டி வாழுறது எந்த விதம்: யானை அணைஞ்ச கையி அருச் சுனரைத் தொட்ட கையி பூனையை அணையச் சொல்லி புள்ளி போட்டானே எந்தலையில் வட்டார வழக்கு: புள்ளி போட்டானே-விதித்தான் கடவுள். சேகரித்தவர்: இடம்: S.S. போத்தையா கோவில்பட்டி. மோதிரம் போடவில்லை முன்னூறு ரூபாய் பரிசம் போட்டுப் பெண்ணைக் கட்டிவைத்தான் தன் மகனுக்கு. தகப்பனது நோக்கம் 300