பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடும்பம் 313 வட்டார வழக்கு: மீனுரசும் கல்லு-தகுதியற்ற கணவன்; விருந்தாடி-தந்தை வீட்டிற்கு வருகிறாள். வினைகாரன் அவளைக் குறை கூறாமல் தன்னைக் குறை சொல்லிக் கொள்ளுகிறார். சேகரித்தவர்: இடம்: S.M. கார்க்கி இவஇரி. மருந்து வைத்து விட்டாரா? ஒருவரை மயக்கிக் கவர்ச்சிப்பதற்கும், ஒருவரை வெறுக்கச் செய்வதற்கும் மருந்து வைப்பது என்ற முறையில் கிராம மக்களுக்கு நம்பிக்கை உண்டு. இது மந்திரவாதத்தின் அடிப்டை யில் நடத்தப்படும் செய்வினை. இப்பாடலில் வரும் பெண் தனது காதலனை அவனது பெற்றோர் மருந்து வைத்து மயக்கி தன்னிடமிருந்து பிரித்து விட்டதாகச் சொல்லுகிறாள். ஆனால் கடைசியில் மருந்தின் மயக்கமல்ல, அவனது மயக்கம்தான் தன்னைக் கைவிடக் காரணமென்றும் சொல்லுகிறாள். இளைய பள்ளி, பள்ளனுக்கு மருந்து வைத்து வசப்படுத்திக் கொண்டாள் என்று முக்கூடல் பள்ளு கூறுகிறது. குருகூர்பள்ளு, அவ்வாறு கூறுவதோடு மருந்து செய்யும் முறையையும் விவரமாகக் கூறுகிறது. உறுதியின்மையை, மருந்தின் விளைவென்று நம்புவோர் காதலை உதறியவனைக் கண்டிக்க மாட்டார்கள். ஆனால் இப்பெண் அவனையே தனது அவல நிலைக்குப் பொறுப்பாக்கித் திட்டுகிறாள் (பெண் பாடுவது) மறக்க மருந்து வச்சு மன்னவர்க்கே தூது விட்டு என்னை மறக்கச் சொல்லி என்ன பொடி தூவினாரோ? முந்தி அழுக்கானேன் நுனி மயிரும் சிக்கானேன் ஆரஞ்சி மேனியெல்லாம் அவராலே அழுக்கானேன் விரிச்சதலை முடியாம வேந்தங் கூட சேராம அரச்ச மஞ்ச குளியாமே அலை புதனே இக்கோலம்