பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314 தமிழர் நாட்டுப் பாடல்கள் ஓலை எழுதி விட்டேன் ஒம்பதாளு தூது விட்டேன் சாடை எழுதி விட்டேன் சன்னல் கம்பி வேட்டியில நெடுநெடுணு வளர்ந்தவரை நீலக்குடை போட்டவரைப் பச்சக்குடை போட்டவரைப் பாதையில் கண்டியளோ? ஆத்துக்குள்ள ஆதாள-என்னை ஆகாதென்று சொன்னவரே தோப்புக்குள்ள தொயிலயிலே-என்னைத் தொட்டிட்டும் போகலாமா? வெள்ள வெள்ளக் கொக்கை விளையும் சம்பா அழிச்ச கொக்கை கண்ணியிலே பட்ட கொக்கை கடை வீதியில் கண்டியளா? ஆத்துக்குள்ள கூட்டிக்கொண்டு அன்பான வார்த்தை சொல்வி தேத்திக் கழுத்தறுத்தானே தேவடியாள் பெத்த மகன் மேற்கண்ட பாட்டின் கருத்தையொத்த தனிப் பாடல் ஒன்று வருமாறு: மதுரைக்குப் போவாதிங்க மாங்கா தேங்கா வாங்காதிங்க மதுரைச் சிறுக்கியல்லோ வச்கருவா கை மருந்து குறிப்பு: தன்னுடைய பெண்மையை அழித்தவனுக்கு, விளையும் சம்பா அழிச்ச கொக்கு என்று கூறுகிறாள். சேகரித்தவர்: இடம்: S.M. கார்க்கி சிவகிரி, நெல்லை மாவட்டம். கணவன் படிக்கும் சத்தம் கிராமத்தில் படித்தவர்களே குறைவு. சில வருஷங்களுக்கு படிக்கத் தெரிந்தவனைப் பற்றி அவனது மனைவிமார்கள் பெருமையாக நினைத்துக் கொள்வார்கள். படித்தவனின்