பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடும்பம் 315 மனைவி அவர் படிக்கும் சத்தத்தைப் புகழ்ந்து தனது தோழியரிடம் கூறுகிறாள். விட்டம் போட்டு வீடெடுத்து வெளி வாசல் தொட்டில் கட்டி வெளி வாசல் தொட்டியிலே வெள்ளிக்கிளி கூவுதுன்னா வெள்ளிக்கிளி சத்த மில்ல விமர் படிக்கும் சத்தம் சட்டம் போட்டு வீடெடுத்து தலைவாசல் தொட்டி கட்டி தலை வாசல் தொட்டியிலே தங்கக்கிளிகூவுதுன்னா தங்கக் கிளி சத்தமில்ல தருமர் படிக்கும் சத்தம் வட்டார வழக்கு: தொட்டி-தொட்டில், வீமர், தருமர்கணவனைக் குறிக்கும்; வெள்ளிக்கிளி கூவுது, தங்கக்கிளி கூவுது-அவன் படிக்கும் சப்தம். உதவியவர்: இடம்: செல்லம்மாள் பொன்னேரிப்பட்டி, சேகரித்தவர்: சேலம் மாவட்டம். கு. சின்னப்ப பாரதி படிக்கும் மாப்பிள்ளை படிக்கிறான் என்று சொல்லிப் பெண்ணைக் கட்டிவைத்தார்கள். படித்து முடிந்ததும் பெண்ணை அனுப்பலாம் என்றிருந்தார்கள். ஆனால் பல வருஷங்களாகியும், அவன் படிப்பு முடிந்த பாடில்லை. மனைவி அவனுடைய கல்லூரியைப் பார்த்திருக்கி றாள். அங்கேதான் படிக்கிறார், எழுதுகிறார் என்றிருந்தாள். ஆனால் எவ்வளவு நாள் தான் படித்துக் கொண்டேயிருப்பார், என்றுதான் தன்னை அழைத்துச் செல்லுவாரென்று அவள் கவலைப்படுகிறாள். வகுப்பில் அவனடையும் தோல்விகளைப் பற்றி அவளுக்குத் தெரியுமா? பத்து பவுனழிச்சு பர்த்தா வுக்குக் காப்பி வச்சேன் பத்தடுக்கு மாடி மேலே படிக்கிறான்னு நாங்க இருந்தோம்