பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316 தமிழர் நாட்டுப் பாடல்கள் படிச்சு முடிப்பாரா பயண மெங்கும் வைப்பாரா? எட்டுப் பவுணழிச்சு எசமானுக்குக் காப்பி வச்சே எட்டடுக்கு மாடி மேலே எழுதறார்ன்னு நாங்க இருந்தோம் எழுதி முடிப்பாரா எண்ணங்களைச் சொல்லுவாரா? உதவியவர்: இடம்: செல்லம்மாள் பொன்னேரிப்பட்டி, சேகரித்தவர்: சேலம் மாவட்டம். கு. சின்னப்ப பாரதி பிறந்த வீடு பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்தில் உரிமையில்லாதி ருந்த காலத்தில், தேர், திருவிழாக்களுக்கு பிறந்த வீடு சென்றாலும், அவர்களை அண்ணிமார் வரவேற்பதில்லை. சில நாட்கள் தங்கினால் முகஞ் சிணுங்குவார்கள். கணவன் கதியற்றுப் போனால் பிறந்த வீட்டில் பெருமை கிடையாது. இக்கருத்தை 'நல்ல தங்காள் கதை விளக்குகிறது. பிறந்து, வளர்ந்து ஒன்றாக உழைத்து உருவாக்கிய பிறந்தகத்துச் சொத்தில் ஒரு உரிமையும் இல்லாது போவதை யெண்ணி தமிழ்ப் பெண்கள் கண்ணிர் வடித்திருக்கிறார்கள். இவ்வுணர்ச்சியை வெளியிடும் பாடல்கள் தமிழில் மிகப்பல. தந்தை இறந்தபோது மகள் பாடும் ஒப்பாரியில் இவ்வு ணர்ச்சி வெளிப்படுவதைக் காணலாம். மணமான பெண்ணின் தந்தையிறந்து விட்டால், அவள் இனி பிறந்தக ஆசை விட்டதென்று எண்ணுவாள். அண்ணனையும், அண்ணியையும் குறை கூறி ஒப்பாரி சொல்லுவாள். இப்பாடல் ஏறக்குறைய ஒப்பாரியை ஒத்துள்ளது. மாரியம்மன் திருவிழாவிற்கு வருமாறு அண்ணன் வருந்தி அழைத்ததால், அவனூருக்குச் செல்லுகிறாள் ஒருத்தி. அங்கு அவள் தங்கியிருந்த ஒரு நாளில் அண்ணி அவளுக்கு அளித்த கெளரவத்தை அவளால் தாங்க முடியவில்லை.