பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடும்பம்

317


மாரியாயி நோம்பு மவுத்தான மாதோம்பு மாரி அழையு மென்றார் மன்னவனைத் தேடுமென்றார் மைந்தனைக் கையெடுத்து மன்னவரை முன்னடத்தி-பொறந்த மறநாடு வந்து சேந்தேன் மரமல்லிப் பூவுக்கு மைந்தன் அழுதிடவும்-நான் மன்னவரைக் கிட்ட வச்சு மைந்தனை எறக்கி விட்டு வண்ணமடி கூட்டி மரமல்லி தான் பறிச்சேன்-நீ மரமல்லியெடுக்காதே மறுக்காத் தழையாதென்றாள் வண்ணமடி யொதறி மலரைக் கொட்டி விட்டு வந்து விட்டேன் சந்நிதிக்கு செல்லியிள நோம்பு தேங் கொழுந்தோர் மாதோம்பு செல்லி அழையுமென்றார் சேவகனைத் தேடுமென்றார் செல்வனைக் கையெடுத்து சேவகரை முன்னடத்தி-பொறந்த சீமைக்குப் போனாலும் செவந்திப் பூவுக்கு செல்வன் அழுதிடவும்-நான் செல்வனை எறக்கிவிட்ட சேவகரை அருகே வச்சு-நான் சின்னமடி கூட்டி செவந்திப் பூ நான்பறித்தேன்அண்ணி செவந்தி பூ எடுக்காதே செடியே தழையாதென்றாள்-நான் சின்ன மடியொதறி சிந்திய கண்ணோடு திரும்பி விட்டேன் என் வீடு