பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



         குடும்பம்         321        
                          

இடுப்பொடிஞ்ச சக்களத்தி நல்லபாம்புக் குட்டி போல வல்லவரைக் கை போட்டா திண்டுக் கல்லு மூலையிலே திண்ணு போட்டேன் கரும்புச்

                   - சக்கை சக்கை திங்க வந்தாளோ சாரங்கெட்ட சக்களத்தி

அடிக்கணும் குளிரும் காய்ச்சல் ஆறு மாசம் ஒரு வருஷம் எடுக்கணும் பாடை கட்டி என் மனசும் பாலாக பாட்டைப் படிக்க வச்சேன் பை நிறையக் கட்டி வச்சேன் பாட்டறியாச் சக்களத்தி பையோட தூக்கிட்டாளே நேத்தரைச்ச மஞ்சப் போல நிறமுடையாளிங்கிருக்க ஒசிச் சிறுக்கிக்காக ஊரு வழி போகலாமா? கருவ மரம் போல கவட்டைக்கால் சக்களத்தி என்னைக் கண்ட நேரமெல்லாம் ஏசுராளே பொரணி நந்தவனத்துப் பச்சை நான் முடியும் சாதிப் பச்சை தான் முடிய வேணுமின்னு தவசிருக்கா சக்களத்தி வருவாக போவாக வாசலுல நிப்பாக வேசை மகளாலே வெறுத்தில்ல போராக இலந்தைப் பழ்ம் போல இங்கிதமாய் நானிருக்க சாணியுருண்டைக்காக சாம வழி போகலாமா? திண்ணையிலே சந்தனமோ கீழத் தெரு வெங்கணமோ