பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 320 தமிழர் நாட்டுப் பாடல்கள்


வட்டார வழக்கு: பச்சி-பட்சி; செஞ்சு-செய்து; கொஞ்சையிலே-கொஞ்சும் பொழுது.

குறிப்பு: இப்பாடல் ஒப்பாரியின் உணர்ச்சியைக் கொண்டுள்ளது.

உதவியவர்: இடம்: தங்கம்மாள் பொன்னேரிப்பட்டி, சேகரித்தவர்: சேலம் மாவட்டம். கு.சின்னப்ப பாரதி

                     சக்களத்தி

அவனுக்கு மணமாகி விட்டது. ஆனால் அவன் மணந்தது அவனுடைய முறைப் பெண்ணையல்ல.வேறொரு பெண்ணை மணந்தும் முறைப் பெண்ணிடம் அவன் நட்பு வைத்திருந்து அவளுடன் குலவுகிறான். பின் ஏன் அவளை மணக்கவில்லை? சொத்து விஷயமே காரணம்.அவளை மணந்தால் அவனுக்கு சொத்துரிமை கிடையாது. அவனது பெற்றோர்களுக்கும், அவளது பெற்றோர்களுக்கும், ஏற்பட்ட சச்சரவும் காரணமாகும்.

தன் கணவன் தன்னைப் புறக்கணித்து அவளுடைய முறைப் பெண்ணுடன் மகிழ்ச்சியோடிருப்பதைக் கண்டு அவளைப் பலவாறு ஏளனமாக ஏசி தன் வெறுப்பை வெளியிடுகிறாள் மனைவி.

         தங்கக் கதவசைய 
         தலைவாசல் வேம்பசைய 
         வயிரக் கல்லு மின்னலுல 
         வந்து நிக்கா சக்களத்தி 
         சக்களத்தி சாவாளோ 
         சாமம் போல வேவாளோ? 
         கோட்டுரு மந்தையிலே 
         கொட்டு மேளம் கேட்பேனோ?
         சிறு வீடு சிறு கதவு 
         சேர்ந்திருந்தோம் சில காலம் 
         என்னை மறப்பதற்கு 
         என்ன பொடி தூவுனாளோ? 
         ஈருவலிக் குச்சி போல