பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 குடும்பம் 319

மாடு ரெண்டும் நல்லாருக்க ஏலாலம்மிடி ஏலாலம் மாமனாரு சாக வேணும் ஏலாலம்மிடி ஏலாலம் சேகரித்தவர்: இடம்: சடையப்பன் சேலம் மாவட்டம்,

 பிள்ளைக்கலி தீரல்லியே
 'ஆண் மகனுக்குத்தான் சொத்துரிமை என்ற சட்டம் அமுலிலிருக்கும் நாடுகளில் ஆண்மகவு வேண்டும் என்ற வேட்கை மகளிர்க்கு ஏற்படுதல் இயல்பே.மணமான இரண்டொரு ஆண்டுகளில் மகப்பேறு உண்டாகாவிட்டால், அவளை புக்ககத்தார் குறைகூறத் தொடங்குவார்கள். பிறந்தகத்தார் அவளை அரசமரம் சுற்றவும், தெய்வங்களுக்கு நேர்ந்து கொள்ளவும் தூண்டுவார்கள். பொதுவாகப் பிள்ளைவரம் தரும் தெய்வங்கள் பிள்ளையார், நாகர், சாத்தன், சப்தமாதர், இசக்கி முதலிய தெய்வங்கள். பெண் பிறந்தால் தாய் மகிழ்ச்சியடைவதில்லை.

குழந்தையில்லாத ஒருத்தி,தனது குறையை தகப்பனிடம் கூறுகிறாள்.

மாமரத்துப் பச்சியெல்லாம் என்னெப்பெத்த அப்பா மைந்தன்னு கொஞ்சையிலே மாவாலே பொம்மை செஞ்சு-

                   பாவிக்கு மைந்தன்னு தந்தீங்க 

மாவுந்தான் பேசலியே என்னெப்பெத்த அப்பா மைந்தன் கலி தீரலியே பூமரத்துப்பச்சி யெல்லாம் என்னெப்பெத்த அப்பா பிள்ளை வெச்சு கொஞ்சையிலே பொம்மை செஞ்சு பாவிக்கு பிள்ளைனு தந்தீங்க பொம்மையுந்தான் பேசலியே என்னெப்பெத்த அப்பா எனக்குப் பிள்ளைக்கலி

                தீரல்லியே!