பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

குடும்பம் 323

ஆடு போகும் வழி தனிலே அரகரா மகனே மார்க்கண்டா-நான் ஆறு குளம் வெட்டி வச்சேன் சிவனே மரடி யோட பேரைச் சொல்ல அரகரா மகனே மார்க் கண்டா மந்தை ஆடு அருந்தலையே சிவனே அரகரா.

வட்டார வழக்கு: மரடு-மலடு.

சேகரித்தவர்: சடையப்பன்

இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.


நடுச்சாவி ஆனதுவே! (மலடி) முன்னரே மலடியின் புலம்பலைக் குறித்து குறிப்பு எழுதியுள்ளோம். இவள் தன்னைக் காய்க்காத தென்னைக்கு ஒப்பிடுகிறாள்.


நனஞ்ச புழுதியிலே

நட்டுவச்ச தென்னம் பிள்ளே

நல்லாப் படருமிண்ணு

நாலு லச்சம் காய்க்குமிண்ணு

நட்டினிங்க தென்னம் பின்னை

நல்லாப் படராமே

நாலு லச்சம் காய்க்காமே

நடுச்சாவி ஆனதுவே!

உழுத புழுதியிலே

ஊனி வச்ச தென்னம் பிள்னை

ஓடிப் படருமின்னீர்

ஒரு லச்சம் காய்க்கு மின்னீர்

ஓடிப் படராமே

ஒரு லச்சம் காய்க்காமே

சிந்திக் கவுந்ததுவே

சொல்லு பிழை ஆனதுவே: