பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

324. தமிழர் நாட்டுப் பாடல்கள்

வட்டார வழக்கு: இன்னீர்-என்றீர்.

உதவியவர்: நல்லம்மாள்


இடம்: பொன்னேரிப்பட்டி, சேலம் மாவட்டம்

சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி

காய்க்காத தென்னை (மலடி)

வாசக் கருவேப்பிலே

வாங்கி வச்ச தென்னம் பிள்ளே

மட்டை புடிக்கு மின்னு

மரநெருங்கக் காய்க்கு மின்னு

நா மவுந்தேன் சில காலம்

மட்டை புடிக்காமே

மர நெருங்கக் காய்க்காமே

நா மாபாவி ஆனேனப்பா!

கோயில் கருவேப்பிலே

கொண்டு வந்த தென்னம் பிள்ளே

கொன்னை புடிக்கு மின்னு

கொலை நெருங்கக் காய்க்குமின்னு

நா குளிந்தேன் சில காலம்

கொன்னை புடிக்காமே

கொலை நெறையக்காய்க்காமே

நா கொடும்பாவி ஆனேனப்பா!


வட்டார வழக்கு: நா-நான், மவுந்தேன்-மகிழ்ந்தேன்; குளிந்தேன்-குளிர்ந்தேன்.

உதவியவர்: நல்லம்மாள்

இடம்: பொன்னேரிப்பட்டி, சேலம் மாவட்டம்.

சேகரித்தவர் கு. சின்னப்ப பாரதி