பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடும்பம் 339 புளியா மரம் அண்ணாடா நான் சாட்சி வச்சி பொங்கிக் கொண்டு அண்ணா போரேனடா ஆத்துலே தான் அண்ணாடா தலை முழுகி அள்ளி நல்லா அண்ணாடா சொருகி கிட்டு குளத்துலே தான் அண்ணாடா தலை முழுகி கூட்டி நல்லா அண்ணாடா எறிஞ்சேனடா கூடுவாளா அண்ணாடா உன் மகளும் கொண்டு செல்ல அண்ணாடா ஆகுமோடா சித்தெறும்பா என் மகன் வேசம் மாறி சிறை எடுக்க அண்ணாடா வருவானடா ஆட்டையும் அண்ணாடா உன் பட்டியுமே நாச மத்து அண்ணாடா போகாதா பாம்பாக அண்ணாடா என்மகனும்-உன் மகள் பஞ்சணைக்கு அண்ணாடா வருவானடா வட்டார வழக்கு: நாசமத்து -நாசமாய். சேகரித்தவர்: கவிஞர் சடையப்பன் இடம்: சேலம் மாவட்டம்.

   கோடி நாட்கள் செல்லும்! 

தாய் வீட்டிற்கு அவள் வந்திருந்தாள். ஒரு நாள் சென்றது.இரண்டு நாட்கள் சென்றன; வாரம் சென்றதும் மாதமும் வந்தது. மகளோ புகுந்த வீட்டிற்கு (புருஷன் வீட்டுக்கு) போவதாகக்