பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

342 தமிழர் நாட்டுப் பாடல்கள்

  தவிடு விற்க நேர்ந்ததுவே 

ஒரு பெரிய வியாபாரியின் குடும்பத்தில் ஒரு பெண் வாழ்க்கைப்பட்டாள். வெள்ளியும் தங்கமும் வியாபாரம் செய்யும் குடும்பத்தில்தான் அவள் மருமகளானாள். ஆனால் வியாபாரம் நொடித்துப் போய்விட்டது. விறகு விற்றும், தவிடு விற்றும் பிழைக்க நேர்ந்தது. இந்த மாறுதலை அவள் வருத்தத்தோடு சொல்லிப் பாடுகிறாள். வெள்ளி ஒரு நிறதான் வெங்கலமும் கால் நிறதான் நான் புகுந்த காசியிலே வெள்ளி வித்த கையாலே வெறவு விக்க நேர்ந்ததுவே தங்கம் ஒரு நிறதான் தாமரமும் கால் நிறதான் நான் புகந்த காசியிலே தங்கம் வித்த கையாலே தவிடு விக்க தேர்ந்ததுவே வட்டார வழக்கு நிற-நிறை வெறவு-விறகு வித்த_விற்ற; விக்க-விற்க. குறிப்பு: தனது பொருளாதார நிலைக்குலைவை "தங்கம் வித்த கையாலே தவிடு விற்க நேர்ந்ததுவே" என்று குறிப்பிடுகிறாள். உதவியவர்: : செல்லம்மாள் சேகரித்தவர்:கு. சின்னப்ப பாரதி இடம்:பொன்னேரிப்பட்டி,சேலம் மாவட்டம் சின்னப்பட முடியலையே மருமகள் பருத்தி ஆட்டி கொட்டையைப் பிரிக்க மணையிலுட்காருகிறாள். இந்த வேலை செய்தால், அவள் கையில் கொஞ்சம் காசு சேரும். இதைக் கண்ட மாமியாருக்குப் பொறுக்கவில்லை. "வீட்டு வேலை செய்யாமல் வீண் வேலை செய்கிறாயே என்று திட்டுகிறாள், மருமகள் தன்னுடைய வருத்தத்தை மனதுக்குள்ளேயே சொல்லிக் கொள்ளுகிறாள். நாடன் பருத்திக் கொட்டை நானாட்ட முடியலியே