பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடும்பம் 343 நாதேரி முண்டகிட்ட சின்னப்பட முடியலியே உக்கம் பருத்திக் கொட்ட நானாட்ட முடியலியே ஊதேரி முண்டகிட்ட சின்னப்பட முடியலியே உதவியவர்: இடம்: பெருமாயி: பொன்னேரிப்பட்டி, சேகரித்தவர்: சேலம் மாவட்டம். கு. சின்னப்ப பாரதி

   மலைக் குரங்கு

இந்துக் குடும்பத்தில் மாமியார் மருமகள் சண்டை இல்லாத குடும்பமே அபூர்வம். கணவன் ஆதரவாக இருந்தால் கூட மகனிடத்தில் தன்னுடைய செல்வாக்குக் குறைந்து விடுமென்று மாமியார் மருமகளோடு சண்டை போடுகிறாள். இப்பாடலில் வரும் மருமகளுக்குச் செல்வத்துக்குக் குறைவில்லை. அவளுடைய கணவனுக்கு நல்ல செழிப்பான பூமி இருக்கிறது. அவளுடைய கணவனும் நல்ல புத்திசாலி. ஆனால் மாமியார் தொந்தரவுதான் தாங்க முடியவில்லை. மாமியார் மீது அவளுடைய கோபம் வெளியாகிறது. பூமியுந்தான் நல்ல பூமி எனக்கு வாய்த்த புண்ணியரும் புத்திசாலி புண்ணியரைப் பெத்தெடுத்த பெருங்குரங்கே தொந்தரவு மண்ணுந்தான் நல்ல மண்ணு எனக்கு வந்த மன்னவரும் புத்திசாலி மன்னவரைப் பெத்தெடுத்த மலைக்குரங்கே தொந்தரவு வட்டார வழக்கு: பெருங்குரங்கு-மலைக்குரங்கு; புண்ணியரும்-கணவரும். உதவியவர்: இடம்: தங்கம்மாள்: பொன்னேரிப்பட்டி, சேகரித்தவர்: சேலம் மாவட்டம். கு. சின்னப்ப பாரதி