பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 சமூகம்

    மறவர் படை

தமிழ் நாட்டில் விஜயநகர மன்னர்களின் பிரதிநிதிகள் 16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில், மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரியத் தொடங்கினர். அதற்கு முன் தமிழ் நாட்டை ஆண்ட பாண்டியர்களின் சந்ததியினர் தென் பாண்டி நாட்டின் பல பகுதிகளில் சிற்றரசர்களாக இருந்தனர். அவர்கள் விஜய நகராட்சிக்கு உட்படாமல் பன்முறை மதுரை நாயக்கர் களை எதிர்த்துப் போர் புரிந்தனர். மறவர்களுக்கு ராமநாதபுரம் சேதுபதிகள் தலைமை தாங்கினர். மதுரையில் முதன் முதல் நாயக்கர் ஆட்சியை நிறுவிய விஸ்வநாத நாயக்கனையும் அவனது தளவாயான அரியநாத முதலியையும் தென்பாண்டி நாட்டில் பஞ்ச பாண்டியர்கள் எதிர்த்துப் போரிட்டனர். இக்கதையை ஐவர் ராஜாக்கள் கதை என்று நாட்டுக் கதைப் பாடல் விவரமாக கூறுகிறது. மறவர்களுடைய எதிர்ப்பு திரு மலை நாயக்கன் காலம் வரை ஓயவில்லை. அக்காலத்தில் சேதுபதியின் படைத் தலைவனாக இருந்த சடைக்கத்தேவன் என்பவனை அடக்குவதற்காக விஜயநகரத்து தலைமைத் தளவா யான ராமப்பய்யன் மதுரை வந்து சேர்ந்தான். இவர்கள் நடத்திய பெரும் போர் இராமப்பய்யன் அம்மானை என்ற நாட்டுப் படலில் விரிவாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய போர் ஒன்றில் மறவர் படையின் வரவை வர்ணித்துப் பாடிய பாடல் இது. வருகுதையா மறவர்படை வானவில் சேனை தளம் மறவரோடு எதிராளி மாண்டவர் கோடிலட்சம் சேகரித்தவர்: இடம்: M.P.M. ராஜவேலு துத்துக்குடி வட்டம், நெல்லை மாவட்டம். "இப்பாடல் மதுரைப் பல்கலைக் கழகத்தினால் வெளியிடப் பட்டுள்ளது. அதன் பதிப்பாசிரியர் நா. வானமாமலை. A 519 - 23