பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

350 தமிழர் நாட்டுப் பாடல்கள் ரயில் வண்டி ரயில் வண்டியை புகைவண்டி என்று கூறுவது தனித் தமிழார்வத்தில் ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்பல்ல. அதைக் கண்ட உடனேயே ஜனங்கள் புகைவண்டி என்றே கூறினர் என்பதைப் பாடலில் காணலாம். ஒராம் சந்தன மரம் கட்டை வெட்டி ஒரு ரூவா வெள்ளி சொப்பி லிட்டு காதத்துலே வண்டி காணுதுபார் கைதாத்தி மரமல்லாம் சாயுதுபார் கத்திச் களஞ்சி வரும் பொகைவண்டி சூரமங்கலம் ஸ்டேஷன்லே நிக்கும் வண்டி அலைஞ்சி கொலைஞ்சி வரும் பொகைவண்டி அல்லா ஸ்டேஷனுல நிக்கும் வண்டி வட்டார வழக்கு: சொப்பு-மரத்தால் செய்த மூடியுள்ள சிறு பாத்திரம்; அல்லா-எல்லா; கொலைஞ்சி-குலைஞ்சுது; சுளஞ்சி-சுழன்று. சேகரித்தவர்: இடம் : கவிஞர் சடையப்பன் அரூர், தருமபுரி மாவட்டம். எதிர்ப்பாட்டு கிராமங்களில் மாட்டுக்காரச் சிறுவர்கள் நேரத்தைப் போக்க ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு பாடுவார்கள். அதில் வசையும், கேலியும் கலந்து இருக்கும். தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பாடப்படுகின்றன. ஒருவன்: வறுத்த கடலை தின்னி வகை வகையாத் தவிடு தின்னி சொறியாந் தவளை தின்னி சொல்லி வாடா தெம்மாங்கை அடுத்தவன்: எதிர்ப் பாட்டு பாடாதடா எனக்கு வெட்கம் ஆகுதடா