பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

354 தமிழர் நாட்டுப் பாடல்கள் முறையில் தமிழில் உருமாறி வழங்குவதால் இவை தமிழ் சொற்களாகி விட்டன. சேகரித்தவர்: இடம்: S.S. போத்தையா தூத்துக்குடி, நெல்லை மாவட்டம். எங்கள் ராஜா மன்னர்கள், மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படும் காரியங்களைச் செய்யாவிட்டால், மக்கள் நினைவில் அவர்கள் நிலைப்பதில்லை. கோவில்பட்டி தாலுக்காவில் தண்ணீர் கொடுத்தவன் தருமன். அவ்வளவு தண்ணீர் பஞ்சம். ராஜா ஊர் ஊராய்க் கிணறு வெட்டி குடி தண்ணீர் வசதி செய்தார். எனவே அவர் இறந்ததை எண்ணி மக்கள் பாடும் பாடலில் அவருடைய ஞாபகம் நிலைத்து விட்டது. ராத்திரி வண்டி காத்து நிக்குது தங்கையா மீள விட்டான் டேஷனிலே நான் வந்தையா ஒவ்வொரு தண்ணி பந்தல் தண்ணிப் பந்தல் வச்ச ராஜா தவறிப் போனாரே எங்கும் புகழ் பெற்ற ராசா தாம்பூலவாசம் தருமருட தோஷம் பிச்சப்பூ வாசம் பிள்ளை யில்லாத் தோஷம் ஆடழுக மாடழுக அஞ்சு லட்சம் ஜனம் அழுக பட்டத்து யானை வந்து பந்தலிலே நின்றழுக யாரு. வந்து அழைத்தாலும் அசையாத எங்க ராஜா எமன் வந்து அழைத்தவுடன்

ஏறிவிட்டார் பூந்தேரு

சேகரித்தவர். இடம்: M.P.M. ராஜவேலு மீளவிட்டான் பகுதி, நெல்லை மாவட்டம்.