பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிவகாசிக் கலகம் சென்ற நூற்றாண்டின் இறுதியில் நாடார் சாதியினர் வியாபாரத்தில் ஈடுபட்டு செல்வாக்குப் பெற்றனர். அவர்களுடைய பொருளாதார நிலை உயர்ந்தது. ஆனால் 'மேல் சாதியினர் அவர்களுக்குச் சமூக அந்தஸ்து அளிக்கவில்லை. ஊரிலுள்ள விசாலாட்சி கோவிலில் அவர்கள் நுழைய உரிமையில்லை. ஊரில் பெரும்பான்மையினராகவும், செல்வச் சிறப்புடையராகவும் இருந்த அவர்கள், கோவிலில் நுழையும் உரிமை கோரினர். இதனை மறுத்த உயர் சாதியினர் சிவகாசிக்கு அருகிலிருந்த ஊர்களில் வாழ்ந்த மறவர் சாதியினரைத் தூண்டி விட்டு, அவர்களுக்கு ஆயுதங்கள் அளித்து கலகத்தைத் தூண்டினர். இக்காலத்தில் மேல் சாதியைச் சேர்ந்த போலீசு உத்தியோ கஸ்தர்களும், சாதிவெறியைத் தூண்டிவிட்டு, மேல் சாதிக்காரர்க ளோடு சேர்ந்து கொண்டனர். கலகம் நடந்தபோது படையெடுத்துவந்த மறவர்களில் பலர் இறந்தனர். பின்னர் வழக்கு நடந்தபோது சிலர் இறந்தனர். கலகம் நடந்தபோது வேலை பார்த்து வந்த அதிகாரிகள் மாற்றப்பட்டனர். பின்னிருந்து தூண்டிய மேல் சாதிப் பணக்காரர்கள் வழக்கிலிருந்து தப்பிக்கொண்டு, கூலிக்கு மாரடித்தவர்களை நட்டாற்றில் விட்டு விட்டனர். இக்கலகம் நடந்தது 1892-ல். இத்தொகுப்பில் கிடைத்துள்ள பாடல்களில் ஒன்று கலகத்தில் முக்கிய பங்கு கொண்ட வெள்ளைத்துரையைப் பற்றிப் புகழ்ந்து கூறுகிறது. மற்றும் ஒன்று அவர்களில் அய்யாத்துரை, ராமச்சந்திரன் ஆகியோர் அநியாயமாக இறந்து விட்டதைக் குறித்து வருந்துகிறது. இக்கலகம் நடந்தது பற்றியே அப்பாடல் பாடியவர் வருந்துகிறார். மோசடிக்கும், சதிக்கும் உள்ளான் மறவர்கள், சிந்தித்துப் பாராமல் துப்பாக்கிக்கு இரையானார்களே என்று பாடகர் வருத்தம் தெரிவிக்கிறார். மேலும் இரண்டு பாடல்கள் கலகம் பற்றி மேல் விபரம் தருகின்றன. சிவகாசிக் கலகம்-1 அண்ணன் தம்பி நாலு பேராம் அழகான ராமச்சந்திரன்