பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

356 தமிழர் நாட்டுப் பாடல்கள் ஆனைகுத்தும் வெள்ளைத் தேவர் அடிச்சாராம் பட்டாளத்த பூனைகுத்து பொன்னுச்சாமி புலியக் குத்தும் ராமச்சந்திரன் கலங்கிடா படை திரட்டிக் கொல்லுதாரே சிவகாசிய கட்டக் கட்ட வெடியெடுத்து கரு மருந்து உள்ளடச்சு கட்டாரே சிவகாசிய செந்தூளாய்ப் போகும்படி நல்ல மறத்தி பெற்ற நடுவப் பட்டி வெள்ளையத் தேவர் கட்டாராம் சிவகாசிய செந்தூளாய்ப் போகும்படி கருந்ததூளா ஆக்குச் சய்ய வெள்ளையத் தேவர் பட்டாக்கத்தி ஆறுமுகம் உள்ள புத்தி சாலாட்சி அம்மன் வெற்றி வட்டார வழக்கு: குத்தும்-கொல்லும்; கட்ட-கட்டை, சிவகாசிய-சிவகாசியை; ஆக்குச் சய்ய-ஆக்கி விட்டது ஐயா, சாலாட்சி-விசாலாட்சி. குறிப்பு: ஆறுமுகம் என்பவர் இப்பாடலை எழுதியவராகலாம். சிவகாசிக் கலகம்-2 அய்யாத்துரை தேவர் சித்திரை மாத்தையிலே சிறந்த செவ்வாய்க் கிழமையிலே ஒன்பதாம் தேதியிலே-அய்யாத்துரை உசுரு கொடுக்கப் போனாரே நாலு மூணும் ஏழு-இந்த இருளாண்டித் தேவரைக் கேளு சாப்பிட்டுக்கை கழுவி சகுனம் பார்த்து வெடியெடுத்து போரானாம் அய்யாத்துரை பொன்னுசுரப் போக்கழிக்க நாலு மூணும் ஏழு-அந்த