பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் 357 நாச்சியரெ கேளு ஏறினார் வில்லுவண்டி இறங்குனார் வேங்கப் புடை சாராய போதையினால் சாஞ்சு விட்டார் அய்யாத்துரை கூடப் பிறந்தவனாம் குடிகாரச் சங்கரனாம் குடிக்கத் தண்ணி கேட்டதுக்கு குதித்து விழுந்து ஓடினானாம் பணத்தைச் செலவழிச்சு படைகளல்லாம் முன்னே விட்டு பின்னால் போகச் சொல்லி பின்னடித்தான் கருணாலபாண்டி பழிப்பாட்டம் குத்தகையார் பாண்டிய மன்னன் அய்யாத்துரை பங்கு வாங்கப் போகப் போயி பழிவிழுந்து மாண்டாரய்யா ஜாதியில் மறக்குலமாம் சாந்த குண அய்யாத்துரை பண்டாரச் செட்டியல்ல பட்டு மடிந்தாரய்யா பழனியாண்டி தேவர் மகன் பாண்டிய மன்னன் அய்யாத்துரை பங்கு வாங்கப் போகப் போயி பழி விழுந்தே மாண்டாரய்யா ஆளிலேயும் நல்லாளு அதிகப் பூஞ் செகப்பு தங்கமுடி அய்யாத்துரை தரகுக் கடை வாரதெப்போ? நெல்லளந்து சேரக்கட்டி நெடும்பரும்ப யானைகட்டி பொன்னளக்க மாட்டாம போய் மாண்டார் அய்யாத்துரை வேட்டி ரெண்டு வெள்ளவேட்டி விடு ரெண்டும் காரவிடு பூஞ் செகப்பு அய்யாத்துரை பொன்னுயிரப் போக்கழிக்க பொண்டாட்டியத் தவிக்க விட்டு புள்ளைகள மருக விட்டு