பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

363 தமிழர் நாட்டுப் பாடல்கள்

வட்டார வழக்கு: காத்திய மடம்-கார்த்திகை நாள் விழா நடைபெறும் மடம்; மொந்தல்-மூலை; அழுக-அழ

சேகரித்தவர்: S.M. கார்க்கி

இடம்: சிவகாசி, இராமநாதபுரம் மாவட்டம்.

      போட்டியும் முடிவும்

விளையாட்டில் ஆரம்பிக்கும் போட்டி வினையாக வளருவ துண்டு. சில ஊர்களில் சேவல் சண்டை மனிதர் சண்டையாக முற்றி, கொலைகள் விழுவதுமுண்டு. எட்டய புரம், பாஞ்சாலக் குறிச்சியில் போட்டிக்கு, சேவல் சண்டை காரணமென்று நாட்டுப் பாடங்கள் தெரிவிக்கின்றன "தற்காலத்திலும்கூட கோஷ்டி விளையாட்டுகளின் முடிவில் கைகலப்பு ஏற்படுவதைக் காண்கிறோம். இதற்குக் காரணம் விளையாட்டுப் போட்டியில் வெற்றி நமக்கே வேண்டும் என்ற எண்ணமே. அடுத்தவருக்கு வெற்றி கிடைத்தால் நமக்கு பொறாமை மூளுகிறது. அது புகைந்து, எரியத் தொடங்குகிறது. கடைசியில் கொலையில் சென்று முடிகிறது. இரண்டு நெருங்கிய உறவினர்கள் (ஒன்று விட்ட அண்ணன் தம்பிகள்) சிவகிரியில் சிறந்த குஸ்தி, சிலம்பு விளையாட்டுக்கா ரர்களாக இருந்தனர். அவர்களுக்குள் விளையாட்டில் சிறு சண்டை ஏற்பட்டு, அது உடனே தணியாமல், தூண்டுவார் தூண்டி விட்டுப் பெரிய பகையாயிற்று. கடைசியில் ஒருவன் மற்றொருவனைக் கொன்று விட்டான். கொலையாளியும் தூக்கு மரத்தில் தொங்கினான். இந்நிகழ்ச்சி 40 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. பயில்வான்களின் பெயர் பெரிய செந்தட்டிக்காளை, சின்னச் செந்தட்டிக் காளை.


அரண்மனைக்குக் கீழ் புறமாம்

அழகான செந்தட்டிக்காளை

சளுக்காணி செந்தட்டியை தலையை

வெட்டிக் கொண்டு போனான்


கட்ட பொம்மு சிந்து, சிதம்பர சுவாமிகள், பதிப்பாசிரியர் நா. வானமாமலை, மதுரைப் பல்கலைக்கழக வெளியீடு, 1974