பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சமூகம் 369


செந்தட்டிக் காளை

சிறுபுலியும் நீள் வேங்கை

கள்ளுக்கடை ஓரம்

கைலாசம் சேர்ந்து விட்டான்

கள்ளுக்கடை ஓரம்

கருப்ப சாமி கோயில் ஓரம்

மார் படர்ந்த செந்தட்டியை

மண்டி போட வெட்டி விட்டான்.

எல்லோரும் எடுக்கும் கம்பு

ஏழைக் கேத்த மூங்கில் கம்பு

சளுக்காணி எடுக்கும் கம்பு

சரியான சடுக்காக் கம்பு


சேகரித்தவர்: இடம்: S.M. கார்க்கி சிவகிரி.


   ஊமைத்துரை போட்ட கொடி


கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு, சிறை உடைத்து மீண்டு வந்து கோட்டையைப் புதுப்பித்து, வெள்ளையர் வெறுப்புணர்ச்சியை பல பகுதிகளிலும் பரப்பி இரண்டு ஆண்டுகள் போராடி, மருது சகோதரர்களது போரிலும் கலந்து கொண்டு வீரமரணம் எய்திய ஊமைத்துரையைப் பற்றி பல நாட்டுக் கதைகள் திருநெல்வேலி மாவட்டத்திலும், இராமநாதபு ரம் மாவட்டத்திலும் வழங்கி வருகின்றன. அவனைப் பற்றி பிற மாவட்டத்தினர் அதிகமாக அறிந்திராவிட்டாலும், பெயரை யாவது தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதை சேலம் மாவட்டத் தில் வழங்கி வரும் இப்பாடல் காட்டுகிறது.


ஒரு மரத்தை வெட்டித்தள்ளி

ஒரு மாமரத்தை ஊஞ்சலாடி

ஊஞ்சலிலே போரகிளி-அது

ஆண் கிளியா-பொண் கிளியா

ஆண் கிளியும் இல்லம் போயா-அது

பொண் கிளியும் இல்லம் போயா

அதோ பறக்குது பார் பச்சைக் கொடி-எங்க

அழகான ஊமைத்துரை போட்ட கொடி

இரண்டு மரத்தை வெட்டித் தள்ளி

ரண்டு மாமரத்தை ஊஞ்சலாடி