பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் 371 ரண்டு கட்டுக் கரும்பாம்-பரங்கி ரண்டால் ஆயிரமாம் அந்தக் கட்டுக் கரும்பை-பரங்கி ஏத்தனாங் கப்பலுக்கு கப்பலு முக்காதம்-பரங்கி கடலு முக்காதம் கப்பலிலிருக்கும் தண்ணிய குடிச்சா தலை கிறுகிறுண்ணும் முப்பது கோழி முட்டை-பரங்கி முன்னுறு சாராயம் எத்தனை திண்ணாலும்-பரங்கிக்கு வெத்திலை திண்ணாப் போல வட்டார வழக்கு : ஏத்தனான்-ஏற்றினான்; வெத்திலை -வெற்றிலை. சேகரித்தவர்; S.S. சடையப்பன் இடம்; அரூர்,தருமபுரி மாவட்டம்.

       நம்ம துரை

ஆங்கிலேயர்கள் நமது நாட்டிற்கு வந்த புதிதில் தமது வியாபார ஸ்தலங்களில் தமிழ் தொழிலாளர்களைக் கூலி வேலைக்கமர்த்தினார்கள். நமது பழக்க வழக்கங்களையும் அவரது பழக்க வழக்கங்களையும், ஒரு தொழிலாளி உற்று நோக்கினான். அவன் காணும் வேறுபாடுகளை வரிசைப் படுத்திச் சொல்லுகிறான். இப்பாடல் கார் போன்ற வாகனங்கள் பழக்கத்து வருமுன் பாடப்பட்டிருக்க வேண்டும்! அது மட்டுமல்ல; கத்தி, கொடுவாளை எதிர்த்து துப்பாக்கி கொண்டு துரைகள் சண்டை செய்தார்கள் என்ற செய்தி ஆங்கிலேயர்கள் ஆட்சி ஏற்படுவதற்கு முன்னால் இப்பாடல்களின் 'கருத்துக்கள் தோன்றியிருக்கின்றன” என்று காட்டுகிறது. ஆனால் முதலில் பாடப்பட்டதிலிருந்து இப்பாடல் சில மாறுபாடுகளோடு காணப்படலாம். பின்னால் வரும் வழக்கங்கள் முன்பு பாடப்பட்ட பாடல்களில் புகுத்தப்படுவது நாட்டுப் பாடல்களின் மரபுக்கு உகந்ததே! தண்ணிமேலே கப்பலோட்டும்-ஏ தங்கம் தந்திரமா நம்ம துரை-ஏ தங்கம்